Thursday, July 19, 2018

மனக்குறள் - 3

ஒவ்வாத குணமுடையோர் இருப்பின் அவரிடம்
ஒட்டாது அகன்றிருப்பது நலம்

Tuesday, July 17, 2018

நகர நெரிசலுக்கு இடையே...

     நகரத்தில் சுற்றியும் வாகனங்களின் அடர்கரும்புகையும், காதுகளை கழட்டி எறிய தூண்டும் horn’இன் கூச்சலும், அணையா இரைச்சலும், முடியா அலைச்சலும், விடா அலுப்பும், வீழா வியர்ப்பும், தகிக்கும் வெப்பமும் இவைகளுக்கு இடையே வாழும் நகரவாசிகளுக்கு தெரியும்... வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று...
     அதைவிட கடினம், இவைகளுக்கு இடையே சின்னசின்ன சந்தோஷங்களிலும் இன்பங்களிலும் திளைப்பது, திளைத்து நிதர்சன இடர்களில் இருந்து தப்பித்து கொள்வது! (An instant and needy escape from present)
உங்களில் யாராவது நகர சாலைகளில் பயணிக்கும் பொழுது, உங்களுக்கு பிடித்த பாடலை அல்லது இசையை மனதால் உச்சரித்து, உதடுகளால் முணுமுணுத்தது உண்டா?
     IPod, Mobile phones, மற்றும் இன்னபிற இசை உபகரணங்களால் இசைக்கப்பட்டு நீங்கள் பாடுவது அல்ல!
     உங்களுக்குள் எதேச்சையாக பெருக்கெடுக்கும் அந்த நிலை. நான் அத்தகைய நிலையை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். உணர்ந்து ரசித்திருக்கிறேன். நிதர்சன இடரில் இருந்து தற்காலிகமாக தப்பித்தும் இருக்கிறேன்.
     அதில் ஒரு இன்பம் உண்டு. நிம்மதி உண்டு. உங்களை நீங்களே உந்தி செல்ல சிறு முயற்சி அது. இதை கேட்டால் சிறுப்பிள்ளைதனமாக உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால்...
முயற்சி செய்து பாருங்கள்!
முணுமுணுப்புகள் தொடரட்டும்!

Friday, July 13, 2018

மறதி ஓர் வரம்

உண்மைதான்!

மறதி எல்லோருக்கும் கிடைக்க பெறாத வரம். நல்லதோ கெட்டதோ அதை மறந்து அடுத்த நொடிக்கு நகரும் வல்லமை பெற்றவனே நிம்மதியாய் வாழும் மனிதனாகிறான்.

நாம் ஒருவருக்கு செய்யும் நன்மை ஆகட்டும், அடுத்தவர் நமக்கு இழைக்கும் தீமை ஆகட்டும், அவற்றை மறக்கக்கூடிய தன்மை... உன்னதமானது! அதி உன்னதமானது!

அந்த குணமும் மனமும் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அதனால்தான் அதை வரம் என்றேன்!

என் வாழ்வில் சில துரோகங்களும் பகைகளும் என்னுள் ஆழ்ந்த வடுவிட்டு சென்றுள்ளது. அவற்றை நினைக்கையில் என்னுள் பெருக்கெடுத்தோடும் வன்மத்திற்கு அளவே இல்லை. அதை கட்டுக்குள் கொண்டுவருவது மிக கடினம்! நங்கூரம் இடாத கப்பல் கடல் சூறாவளியில் மாட்டி திண்டாடுவது போல்தான் என் நிலைமை.

ஒரு மகிழ்வான தருணத்தை மனதில் ஓடவிட்டு, அத்தேவையற்ற எண்ணங்களை மாய்த்து கொள்கிறேன்.
இறைவனை நினைத்து கொள்கிறேன்.
இன்னும் மறதி வேண்டும் என்று அவனிடம் வேண்டுகிறேன்.

ஆங்கிலத்தில் ஓர் சொல்லுண்டு, ‘Ignorance is bliss!’
என்னை பொறுத்தவரை, ‘Forgetfulness is also a bliss!’. As Forgetfulness paves way for forgiveness
மறதி நம்மை கொண்டு செல்லும் மன்னித்தலை நோக்கி...

மனிதனுக்கு மறதி அதிஅவசியம். அதைதான் மனக்குறள்-2 என பதிவிட்டுள்ளேன்.

மதிக்கெட்டோர் மத்தியில் மனிதம் மலர
மறதியே மாய மந்திரம்

Thursday, July 12, 2018

மனக்குறள்-2

மதிக்கெட்டோர் மத்தியில் மனிதம் மலர
மறதியே மாய மந்திரம்

Athmanathan, One of My Junior

A long time wish
And today its done
To sketch this..

He is Athmanathan
One of my juniors, whom I am proud of!

And about him...
You can check the above cartoon!

Na.Muthukumar, Thamizh Lyricist and Writer

முற்று பெறா கவிதை நீ...
அற்று போகா பந்தம் நீ!

Remembering Na.Muthukumar
Who is eternal
With his words
#Na_Muthukumar